`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்’ – அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்!

0 31

அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்பு கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேற்றுமுன்தினம் ஆஜரானார் அப்போது கூகுள் தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார் சீனாவில் தேடு பொறி இயந்திரம் செயல்படுத்துவது கூகுள் நிறுவனத்தில் இருக்கும் மீடூ புகார்கள் ட்ரம்ப் அமெரிக்க தேர்தல் என பல்வேறு விஷயங்கள் குறித்து சுமார் 3 மணி நேரம் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன ஒவ்வொரு உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கும் முகம் சுளிக்காமலும் கோவப்படாமலும் நிதானமாக அவர் பதிலளித்த விதம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது அப்போது  தேர்தலின்போது குடியரசுக் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த அவர் அரசியலில் பாரபட்சத்துடன் செயல்பட்டதில்லை என்று விளக்கினார் மேலும் சீனாவுக்கென்று தனியாகக் கூகுள் தேடு பொறியை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவுமில்லை என்று கூறினார் ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக சுந்தர் பதிலளிக்கும்போது நாடாளுமன்றத்தில் ஒரு வாழ்த்து குரல் ஒலித்தது அவர் தமிழகத்தைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் தமிழ் வம்வசாவளியைச் சேர்ந்த பெண்ணான இவர் சுந்தர் பிச்சையிடம் ரோஹிங்கியா இனப்படுகொலை பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்இதற்கான பதிலை வாங்கியபின் பேசிய என்னைக் கொஞ்சம் தனிப்பட்ட விஷயத்தைப் பேச அனுமதியுங்கள் எனக் கூறி “சுந்தர் நீங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிறந்து வளர்ந்தீர்களோ அதே மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன் நீங்கள் கூகுளை நடத்திச் செல்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது இன்று உலகின் மிக முக்கியமான இருவேறு பொறுப்புகளில் நாம் இருவரும் பதவி வகித்து வருகிறோம் வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டுக்கு வரும் மக்கள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன ஆனால் வெளிநாட்டினர் இந்நாட்டுக்கு அளிக்கும் பங்களிப்பு மகத்தானது என வாழ்த்து தெரிவித்தார் பிரமிளா ஜெயபால் தமிழகத்தைச் சேர்ந்தவர் சென்னையில் பிறந்த இவர் பின்னர் கல்விக்காக அமெரிக்கா சென்றவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் சமூகப் பணிகளில் நாட்டம் அதிகரித்து அதைச் சிறப்பாகச் செய்து வந்துள்ளார் இது அவரைத் தீவிர அரசியலுக்குள் களமிறங்க வைத்தது ஜனநாயக கட்சி சார்பில் வாஷிங்டனின் சியாட்டில் பகுதியில் போட்டியிட்டு  பெரும்பாலான அமெரிக்க – இந்தியர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபையின் முதல் இந்தியப் பெண் எம்பி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.