குழந்தைக்கு ஹிட்லர் பெயர்; பெற்றோர்களுக்குச் சிறைத்தண்டனை!

0 50

தங்கள் குழந்தைக்கு ஹிட்லர் பெயரை வைத்த பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் லண்டனில் நடந்துள்ளது ஜெர்மனியின் சர்வாதிகாரி யூத மக்களை அழித்து இனப் படுகொலை நிகழ்த்தியவர் மனசாட்சி இல்லாதவர் இவையெல்லாம் அடால்ஃப் ஹிட்லர் பெயரை கேட்டால் நமக்கு நினைவுக்கு வருபவை ஒரு கொடூர மனம் படைத்தவர்களை பற்றிப் பேச வேண்டுமானாலும் ஒரு சர்வாதிகாரியை இகழ வேண்டுமானாலும் நாம் ஹிட்லர் பெயரை சொல்லித்தான் கூப்பிடுவோம் அந்த அளவுக்கு ஒரு சர்ச்சைக்குரிய பெயராகவே ஹிட்லர் பெயர் இருந்து வருகிறது இப்படிப்பட்ட பெயரை தங்களின் குழந்தைக்கு வைத்துள்ளனர் பிரிட்டன் தம்பதியினர் பிரிட்டனைச் சேர்ந்த அடம் தாமஸ் கிளாடியா பெட்டாதஸ் என்ற இந்தத் தம்பதி தங்கள் குழந்தைக்கு அடால்ஃப் எனப் பெயரிட்டுள்ளனர் இது சர்ச்சையாக மாற தற்போது பிரிட்டன் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டதாகப் பெற்றோர்கள் இருவரும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்குச் சிறைத்தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம் கிளாடியாவுக்கு 5 ஆண்டுகளும் தாமஸுக்கு 6 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுஹிட்லர் பெயரை வைத்ததற்காக மட்டும் இவர்களுக்குத் தண்டனை கிடைக்கவில்லை ஹிட்லரின் கருத்தின்படி யூதர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறிவந்ததுடன் இவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Leave A Reply

Your email address will not be published.