`77 வயதாகிவிட்டது, உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?’- ஏழை சிறுவனை கண்கலங்கவைத்த அதிபரின் கடிதம்

0 15

பிலிப்பைன்ஸ் சிறுவன் தீமோத்திக்கு அப்போது 7 வயது படிக்க வேண்டும் என்று ஆசை கூடவே குடும்பச் சூழலால் அந்த ஆசை சாத்தியமில்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஒருநாள் தீமோத்தியின் கிராமத்துக்கு `Compassion International’ என்னும் கிறிஸ்துவ தொண்டு நிறுவனம் வந்திருந்தது மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகளைத் தேர்வு செய்து அவர்களின் பெயர் முகவரி உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டுக் கொண்டு போனது தீமோத்திக்கு ஒன்றும் புரியவில்லை பின்னர்தான் தெரிய வந்தது தீமோத்தி போன்ற சிறுவர் சிறுமியரைத் தொண்டு நிறுவனம் ஸ்பான்ஸர்கள் மூலம் படிக்க வைக்கப் போகிறதென்று தீமோத்திக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை `மீண்டும் அவர்கள் எப்போது வருவார்கள் நமக்கு ஸ்பான்ஸர் கிடைக்குமா கிடைக்காதா எப்போது பள்ளிக்குப் போவோம்’ என்று அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான் அவன் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது தீமோத்தி படிப்புக்கு ஸ்பான்சர் செய்ய ஒருவர் முன்வந்திருப்பதாகத் தொண்டு நிறுவனம் தெரிவித்தது தீமோத்திக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான் ஒருநாள் தொண்டு நிறுவனத்திலிருந்து தீமோத்திக்கு பார்சல் வந்திருந்தது அதில் தீமோத்தியின் ஸ்பான்சர் எழுதியிருந்த கடிதம் இருந்தது அந்தக் கடிதத்தில் `டியர்  தீமோத்தி நான் வாக்கர் உன் நண்பனாக என்னை ஏற்றுக்கொள்வாயா கடிதங்கள் வாயிலாக நம் நட்பை பரிமாறிக் கொள்ளலாம் எனக்கு 77 வயதாகிவிட்டது ஆனால் எனக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் நாம் சந்தித்ததேயில்லை ஆனால் உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும் அடிக்கடி உனக்குக் கடிதம் எழுதுகிறேன் நன்றாகப் படி’ என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது தீமோத்திக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது தீமோத்தியும் பதிலுக்கு அன்பை பொழிந்து கடிதம் எழுதினான் இப்படியாக இவர்களின் நட்பு வளர்ந்தது தீமோத்தியும்தான் வாக்கர் கடிதங்களுடன்தான் வளர்த்துவரும் நாய் உள்ளிட்டவற்றின் புகைப்படங்களையும் அனுப்பி வைப்பார் தீமோத்தி பதிலுக்கு தான் வரைந்த ஓவியங்கள் கவிதைகள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைப்பான்தீமோத்திக்கு 17 வயதானது 2010-ம் ஆண்டு வெற்றிகரமாகப் படிப்பை முடித்து பட்டமும் பெற்றான் தனக்கு ஸ்பான்ஸர் செய்த வாக்கரை பார்க்க வேண்டும் என்று தீமோத்திக்கு தோன்றியது `Compassion International’ தொண்டு நிறுவனத்திடம் வாக்கரை பார்க்க வேண்டும் என்று கூறினான் அப்போது தொண்டு ஊழியர் சொன்ன பதில் தீமோத்தியை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது ‘உனக்கு ஸ்பான்சர் செய்தது வேறு யாருமில்லை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்டபிள்யூ புஷ்’ என்றனர் தீமோத்தி ஆடிப்போனான் இவை நடந்தது 2010-ம் ஆண்டு  ஜார்ஜ் HW புஷ் ஏழை சிறுவனுடன் கடிதம் வாயிலாக அன்பை வளர்த்த இந்தக் கதையை  `Compassion International’ தற்போது வெளியிட்டுள்ளது ஜார்ஜ் புஷ் பாதுகாப்பு காரணங்களுக்காக தன் அடையாளத்தை மறைத்து சிறுவனுடன் நட்பு வளர்த்திருக்கிறார் தீமோத்தி தற்போது எங்கு வேலை செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை ஜார்ஜ் HW புஷ் மறைவுக்குப் பிறகு அவரைத் தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சி செய்தோம் ஆனால் முடியவில்லை’ என்று தொண்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்  ஸ்டாஃபோர்ட் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார் ஜார்ஜ் புஷ் பற்றிய இந்தச் செய்தி வைரலாகி வருகிறது தீமோத்தி தற்போது எங்கிருக்கிறார் என்று  தேடுதல் வேட்டையில் ஜார்ஜ் குடும்பம் இறங்கியிருக்கிறதாம் 

Leave A Reply

Your email address will not be published.