`சொன்ன பேச்சைக் கேட்பதில்லை!’ – 80 வயது பிள்ளைகளின் பிறந்தநாளில் கடிந்துகொள்ளும் 103 வயது தாய்

0 41

நம் மக்கள் 60-வது பிறந்தநாளையே மிகவும் விமரிசையாக சொந்தபந்தங்களைக் கூட்டிக் கொண்டாடுவார்கள் அமெரிக்காவில் ட்வின்ஸ் இருவர் தங்கள் 80-வது பிறந்தநாளை மிகவும் எளிமையான முறையில் வீட்டில் வைத்துக்கொண்டாடியிருக்கிறார்கள் இதில் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா 80 வயது பர்த்டே பேபி இருவரும் தங்கள் 102 வயது தாயுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான மைனேவில் சன்னி ப்ரூக் என்னும் பகுதியில் டேவிட் மோஷர் வசித்து வருகிறார் அதே பகுதியில் அவரின் ட்வின் சகோதரியான வின்னி மோஷரும் வசித்து வருகிறார் நேற்று (412019) அவர்களுக்கு 80-வது பிறந்தநாள் இருவரும் தன் தாய் ஹெலன் மோஷரை வீட்டுக்கு வர வைத்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர் ஹெலன் மோஷருக்கு வயது 103 சில நேரம் தனியாக வசிப்பார் சில நேரம் தன் பிள்ளைகளின் வீட்டில் வசிப்பார் ஆனால் தன் பிள்ளைகளின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மறக்காமல் ஆஜராகிவிடுவார் மகன் மகள் பேரன்கள் பேத்திகள் கொள்ளுப் பேரன் பேத்திகள் என ஹெலனுக்கு மொத்தம் 79 வம்சாவளியினர் உள்ளனர் ஹெலன் தீவிர பேஸ்பால் ரசிகை சோர்வடையாமல் தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக்கொண்டிருப்பதே தன் ஆரோக்கியத்தின் ரகசியன் என்கிறார் ஹெலன் அதுமட்டுமில்லை தன் பிள்ளைகள் கொள்ளுப் பேரன் பேத்தி எடுத்த பிறகும் தன் பேச்சைக் கேட்பதில்லை எனச் செல்லமாக கடிந்துகொள்கிறார் ஹெலன் பிள்ளைகளுக்கு எவ்வளவு வயசானாலும் அம்மாவுக்கு அவர்கள் சிறு பிள்ளைகளாகத்தான் தெரிவார்கள் என்பது சரிதான்    

Leave A Reply

Your email address will not be published.