“தூத்துக்குடிக்கு வெளிநாட்டு நிருபர் வந்தது அச்சத்தைத் தரக்கூடியதாகவே இருக்கிறது!”

0 56

 அமெரிக்காவைச் சேர்ந்த சியெல்லோ மார்க் என்ற இளைஞர் கடந்த டிசம்பர் 27-ம் தேதி தூத்துக்குடிக்கு வந்தார் “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கிராமங்களுக்குச் சென்று புகைப்படம் வீடியோ எடுத்ததுடன் மக்கள் மற்றும் போராட்டக்காரர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார்” என உளவுத்துறை போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று உளவுப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர் அவர் கார்டியன் அல்ஜசீரா ஆகிய பத்திரிகைகளில் ஃப்ரீலான்சராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளதாகவும் தற்போது எச்பிஓ என்ற ஆங்கிலத் தொலைக்காட்சியின் தயாரிப்பாளராகப் பணியாற்றி வருவதாகவும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து வருவதாகவும் கூறியுள்ளார் அவரிடமிருந்து புகைப்படங்கள் வீடியோக்களைப் பறிமுதல் செய்து தூத்துக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போரட்டம் நடைபெற்ற கிராமங்களுக்கு அவரை அழைத்துச் சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரிடம் இரவில் விசாரணை செய்யப்பட்டது இந்நிலையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த மார்க் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்  அமெரிக்கப் பத்திரிகையாளர் சியல்லோ மார்க்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடைபெற்ற கிராமத்துக்கு அழைத்துச் சென்ற பிரின்ஸை தொடர்புகொண்டு பேசினோம் “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் குறித்து போராட்டக்காரர்களிடம் கருத்துகளைக் கேட்க அமெரிக்காவிலிருந்து மார்க் என்று ஒரு பத்திரிகையாளர் தூத்துக்குடிக்கு வந்தார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு மற்றும் சில போராட்டக்காரர்களைச் சந்தித்துப் பேசினார் பின்னர் `ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் அதில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேச வேண்டும்39 என்றார் அவருக்குத் தமிழ் பேசத் தெரியாது என்பதால் மொழிபெயர்ப்புக்காக நான் அவரை அழைத்துச் சென்றேன் பண்டாரம்பட்டி கிராமத்துக்கு முதலில் சென்றோம் அங்கு தலை மற்றும் நுரையீரலில் கேன்சர் பாதித்துள்ள முத்துசாமி என்பவரைச் சந்தித்தோம் இன்னும் சில பெண்களைச் சந்தித்தோம் ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் புகையால் மூச்சுத்திணறல் தலைவலி ஏற்படுகிறது எனச் சொன்னார்கள் இதேபோல ஒவ்வொரு தரப்பினரும் அவரவர் சார்ந்த பிரச்னைகளைச் சொன்னார்கள் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் உள்ள கிணற்றுத் தண்ணீரைப் புகைப்படம் எடுத்துக்கொண்டார் துப்பாக்கிச்சூட்டில் குண்டுதுளைத்து காயமடைந்த சிலரையும் சந்தித்தோம் ஒவ்வொருவரையும் சந்திக்கும்போதும் அவர் என்னிடம் கேட்ட ஆங்கிலக் கேள்விகளைக் கிராமத்தினரிடம் கேட்டு மீண்டும் அவரிடம் சொன்னேன் அவர் அதை நோட்பேடில் குறித்து வைத்துக்கொண்டார் பின்னர் அவருக்கு சால்னாவுடன் புரோட்டா வாங்கிக் கொடுத்துவிட்டு அவர் தங்கியிருந்த ஹோட்டலில் விட்டுவிட்டேன்அன்று இரவே 10 மணிக்கு என் வீட்டு வாசலில் வடபாகம் போலீஸார் வந்து `உங்களை விசாரிக்கணும்39 எனச் சொல்லி என்னை அழைத்துப் போனார்கள் முதலில் `தெற்கு காவல் நிலையம்39 என்றனர் பின்னர் பாதி வழியிலேயே `சிப்காட் காவல் நிலையம்39 என்றனர் திரும்பவும் வண்டியைத் திருப்பி `தெற்கு காவல் நிலையம்39 எனச்சொல்லி சிப்காட் காவல் நிலைய வழிக்குச் சென்று கடைசியாக `தெர்மல்நகர் காவல் நிலையம்39 எனச் சொல்லி தெர்மல்நகர் பீச் பகுதில் ஜீப்பை நிறுத்தி விசாரணை செய்தார்கள் நடந்ததைச் சொன்னேன் மொத்தம் 3 மணி நேர அழைக்கழிப்புக்குப் பிறகு வீட்டிலேயே இறக்கிவிட்டுச் சென்றார்கள்” என்றார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமா பாபுவிடம் பேசினோம் “பொதுவாகவே ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான  பேட்டிகள் கருத்துகளைக் கேட்க தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலம் வெளிநாடுகளிலிருந்து பத்திரிகையாளர்கள் என்னைத்தான் தொடர்புகொள்வார்கள் அதைப்போலத்தான் அமெரிக்காவிலிருந்து வந்த  சியல்லோ மார்க் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு `தான் ஒரு ஃப்ரீலான்ஸர் பத்திரிகையாளர்39 என அறிமுகப்படுத்திக்கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எங்கள் இயக்கத்தின் சார்பில் இதுவரை  நடைபெற்ற போராட்டங்கள் குறித்துப் பேசினார் பின்னர் போராட்டம் நடைபெற்ற கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் எனச் சொன்னார் எனக்கு மற்ற வேலைகள் இருந்ததால் எங்கள் இயக்கத்தின் உறுப்பினர் பிரின்ஸை மொழிபெயர்ப்பு உதவிக்காக அவருடன் போய்வரச் சொன்னேன் ஆனால் அவரை போலீஸார் விசாரணை என்ற பெயரில்  அழைக்கழித்துள்ளனர்நச்சுப்புகையை வெளியிட்டுச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி மக்களின் உடல்நலதைப் பாதிக்கும் இந்த ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் தூத்துக்குடியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களின் நோக்கமாக உள்ளது அதனால் ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி யார் கேட்டாலும் அதன் பாதிப்புகளைப் பற்றிப் பேச நான் தயங்கமாட்டேன் தயாரக இருப்பேன் அதேபோலத்தான் அமெரிக்கப் பத்திரிகையாளர் மார்க்கும் என்னிடம் பேசினார் அவரிடம் நீங்கள் ரூரிஸ்ட் விசாவில் வந்தவரா அல்லது புரொபஷனலாக வந்தவரா உங்களது விசாவைக் காட்டுங்கள் என்றா கேட்க முடியும் டூரிஸ்ட் விசாவில் வந்து அவர் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது தவறுதான் அதே நேரத்தில் தமிழகத்திலிருந்து டூரிஸ்ட் விசாவில் வெளிநாடு செல்லும் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் அங்கு ஒரு கருத்தரங்கில்கூடவா  பங்கு பெற்றிருக்கமாட்டார்கள் வெளிநாட்டு கம்பெனியான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்த அரசு கொடிபிடிப்பது மட்டும் சரியா மத்திய மாநில அரசுகளின் ஆதரவு ஸ்டெர்லைட் ஆலைக்கு அமோகமாக உள்ளது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்” என்றார்இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் “தூத்துக்குடியில் மக்கள் மெள்ள மெள்ள மீண்டு வந்துகொண்டிருக்கும்போது சில வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதலோடு இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகள் தேவையில்லாமல் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன இதனிடையே அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் என்பவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடைபெற்ற இடங்களைப் பார்வையிட்டு விசாரித்துள்ளார் அவரது வருகையும் அச்சத்தைத் தூண்டுவதாகவே தோன்றுகிறது ஸ்டெர்லைட் போராட்டத்துக்குப் பிறகு தூத்துக்குடி நக்சல்களின் பிடியில் சென்றுவிட்டது எனவே உடனடியாகத் தூத்துக்குடியை நக்சல்களின் பிடியிலிருந்து மீட்க வேண்டும்இத்தனை வருடம் ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டுகொள்ளாத கிறிஸ்தவர் மதபோதகர் மோகன் சிலாசரண் தற்போது இந்த ஆலையை நச்சாலை எனப் பிரசாரம் செய்துவருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை விசாரிக்காமல் கோட்டைவிட்டதுபோல அமெரிக்க இளைஞர் விவகாரத்தில் மெத்தனமாக இருந்து அவரை திருப்பி அனுப்பிவிட்டது ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த பாத்திமா பாபுவுக்கு அதர் மீடியா என்ற பெயரில் ரூ17 கோடி வந்ததாக வழக்கறிஞர்கள் ஆதாரங்களுடன் கூறுகிறார்கள் அதுகுறித்தும் தீவிரமாக மத்திய மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும் பிரிவினைவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்கிறார்இதுகுறித்து மாவட்ட எஸ்பி முரளிரம்பாவிடம் பேசினோம் “அமெரிக்காவிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த சியல்லோ மார்க் டூரிஸ்ட் விசாவில் வந்து சம்பந்தமில்லாமல்  செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் அவரது விசா வரும் 21-ம் தேதி வரை செல்லத்தக்கதாக இருந்தாலும் மீண்டும் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளோம் அவர் மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வரமுடியாதபடி அவரது பெயரை பிளாக் லிஸ்ட் செய்யும்படி சென்னையில் உள்ள வெளிநாட்டு மண்டலப் பதிவு அதிகாரிக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளோம் மேலும் அவர் சந்தித்துப் பேசிய நபர்களுக்குச் சம்மன் அனுப்பியும் விசாரணை செய்து வருகிறோம்” என்றார்கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் அரியவகை மணல் ஆலை மற்றும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் ரொலாண்ட்ரெனே ஜூலியஸ் டெமின் ஆகியோர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துவிட்டு திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தப்பிச் சென்றனர் இந்த இருவர் மீது வெளிநாட்டவர் வழிநெறிச் சட்டத்தை மீறி அத்துமீறித் தடைசெய்யப்பட்ட பகுதியில் நுழைந்து வீடியோ புகைப்படம் எடுத்ததாகவும் அவருக்கு உதவியதாக மணக்குடி பங்குத்தந்தை கிளிட்டஸ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது இந்த வழக்குப்பதிவு விவகாரத்தைச் சுட்டிக்காட்டி எஸ்பி-யிடம் கேட்டபோது “தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அவர்கள் அத்துமீறி நுழைந்துசென்று வீடியோ புகைப்படம் எடுத்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கலாம்” என்றார்உளவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது “அமெரிக்காவிலிருந்து கடந்த 7-ம் தேதி இந்தியாவுக்கு வந்த அவர் தூத்துக்குடிக்கு 27-ம் தேதி வந்தார் தூத்துக்குடியில் உள்ள போராட்டக்காரர்களை முகநூல் வழியாகத் தொடர்புகொண்டு வந்ததாகச் சொன்னார் சுற்றுலா விசாவில் வந்து பத்திரிகை வேலையைச் செய்தது உண்மை அது தவறுதான் என ஒப்புக்கொண்டார் ஆனால் மற்ற தகவல்களைப் பற்றிக் கேட்டதற்கு மெளனமாகவே இருந்துவிட்டார் இது சர்வதேச லெவல் பிரச்னை என்பதால் விசாரணையில் அதிரடி காட்ட முடியவில்லை இருப்பினும் அவரைப் பற்றிய தகவல்களை உளவுத்துறை தரப்பிலும் அமெரிக்க நாட்டுக்கு அனுப்பியுள்ளோம்” என்றனர்    அமெரிக்கப் பத்திரிகையாளர்களிடம் சந்தித்துப் பேசியதற்காக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு வணிகர் சங்கத்தைச் சேர்ந்த ராஜா மீனவர் சங்கத்தைச் சேர்ந்த ரீகன் மற்றும் அவருடைய மொழிபெயர்ப்புக்கு உதவிய பிரின்ஸ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர் ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாகவும் போராட்டங்கள் குறித்தும் செய்தி சேகரிக்க அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த சியல்லோ மார்க் `சுற்றுலா விசாவில் ஏன் வர வேண்டும்39 என்ற கேள்வி எழுந்துள்ளது அப்படியே சுற்றுலா விசாவில் வந்த அவர் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட நினைத்தால் ஆட்சியர் அலுவலகம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தைத் தொடர்புகொண்டிருக்கலாம் எனவும் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பத்திரிகையாளர்களுக்குத் தடையா எனவும்  கேள்விகள் எழுந்துள்ளனஇதன் பின்னணி குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்  

Leave A Reply

Your email address will not be published.