அரசு ஊழியர்களுக்கு ரகசியமாக பீட்சா டெலிவரி செய்த ஜார்ஜ் புஷ்! – என்ன காரணம்?

0 43

அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் பாதுகாப்பு காரணத்துக்காக சுவர் எழுப்பத் திட்டமிட்டுள்ளார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தத் திட்டத்துக்கு 40000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் அதற்கு செனட் சபை ஒப்புதல் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார் ட்ரம்ப் ஆனால் இவரின் வேண்டுகோளை செனட் சபை ஏற்க மறுத்துவிட்டது இதனால் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அமெரிக்க அரசாங்கம் முடங்கிப்போயுள்ளது அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாகத் தற்போது நீண்ட நாள்களாக அரசு முடக்கப்பட்டுள்ளது இதனால் அந்த நாடு முழுவதிலும் உள்ள 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்து வருகின்றனர் ஊதியம் இல்லாமல் வேலை செய்பவர்களுக்கு உதவும் விதமாகப் பல தனியார் நிறுவனங்கள் இலவச பீட்சாக்களை வழங்கி வருகின்றனநேற்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும் அரசு ஊழியர்களுக்கு பீட்சா டெலிவரி செய்துள்ளனர் அந்தப் புகைப்படத்தை புஷ் தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதனுடன் நானும் லாரா புஷும் இணைந்து நாட்டுக்காகச் சம்பளம் வாங்காமல் உழைக்கும் ஊழியர்களுக்கு ரகசியமாகச் சென்று பீட்சா வழங்கினோம் மேலும் அரசு ஊழியர்களுக்கு உதவி செய்யும் நாட்டு மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் அரசாங்கம் மூடப்பட்ட விவகாரத்தில் இரு புறமும் உள்ள தலைவர்கள் அரசியலை ஓரமாக வைத்துவிட்டு ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது” எனக் குறிப்பிட்டுள்ளார்ஜார்ஜ் புஷ் பதிவிட்டுள்ள புகைப்படம் உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது இவரின் செயலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் 

Leave A Reply

Your email address will not be published.