நாட்டுக்கே இளவரசர்… ஆனாலும் கடமை தவறாத பிரிட்டன் போலீஸ்!

0 34

இங்கிலாந்தில் ஷெரிங்டாம் எஸ்டேட் பகுதியில் பிரிட்டன் இளவரசர் பிலிப் ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளாகிக் கவிழ்ந்தது விபத்தில் லேசான காயங்களுடன் இளவரசர் உயிர் தப்பினார் பிலிப் காருடன் மோதிய மற்றொரு காரில் இருந்த பெண் உட்பட இருவர் காயமடைந்தனர் இந்த காரில் இருந்த 9 மாத கைக்குழந்தை எந்த காயமும்  ஏற்படவில்லை  மிகப் பெரிய விபத்தாக இருந்த போதிலும் அனைவரும் லேசான காயத்துடன் தப்பினர் இளவரசர் பிலிப்புக்கு கார் ஓட்டுவதில் கொள்ளைப் பிரியம் 2016- ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா  மிட்சல் ஒபாமாவுக்கு பிரிட்டன் ராணி ஷெரிங்டாம் எஸ்டேட்டில் விருந்தளித்தார் அப்போது பிரிட்டன் ராணி ஒபாமா மிட்செல் ஆகியோருக்கு இளவரசர் பிலிப் கார் ஓட்டினார் தற்போது 97 வயதான நிலையிலும் அவருக்கு கார் ஓட்டும் ஆசை குறையவில்லை விபத்து நடந்ததும்  கவிழ்ந்த காரில் இருந்து வெளியே வந்த இளவரசர் அருகில் இருந்தவர்களிடத்தில் 39அந்த காரில் இருந்தவர்கள் ஏதும் காயம் அடைந்துள்ளனரா39 என்று அக்கறையுடன்  விசாரித்துள்ளார் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளவரசர் பிலிப் மது அருந்தியிருக்கிறரா என்றும் பரி சோதனை நடத்தினர் இரு காரை ஓட்டியவர்களுமே மது அருந்தியிருக்கவில்லை என்று தெரிய வந்தது இயல்பாகவே பிரிட்டன் இளவரசர் பிலிப் வேகமாக கார் ஓட்டுவார் 97 வயதிலும் காரை வேகமாக இயக்கியிருக்கலாம் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது 39இளவரசர் கார் ஓட்டுவதை ஒரே ஒருவரால்தான் தடுக்க முடியும் பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு இளவரசரிடத்தில் இருந்து கார் சாவியை பறிக்கும் தைரியம் உண்டா39 என்று பிரிட்டன் பத்திரிகைகள் கேள்வி எழுப்பியுள்ளனபிரிட்டனைப் பொறுத்தவரை கார் ஓட்ட வயது ஒரு தடை இல்லை ஆனால் 70 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும் பிரிட்டன் ராணிக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை இளவரசர் தன் உரிமத்தைப் புதுப்பித்தே வைத்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.