புலியுடன் போட்டோ, `கமகம’ கடல் உணவு, கலர்ஃபுல் கடற்கரைகள்… `பூவுலகின் சொர்க்கம்’ புக்கட்!

0 76

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரம் ஒன்று நமக்கு வெகு அருகிலேயே இருக்கிறது அந்த நகரத்தின் பெயர் பாங்காக் தாய்லாந்து நாட்டின் அழகிய தலைநகரம் சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில் பாங்காக் சென்றுவிடலாம் சென்னையில் இருந்து பாங்காக் செல்ல தினமும் நேரடி விமானங்கள் உள்ளன உலகின் பழம்பெருமைமிக்க நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று இயற்கை அன்னை இந்த நாட்டைச் செதுக்கி எடுத்திருக்கிறாள் `பூவுலகின் சொர்க்கம்39 என்று சொல்லப்படும் புக்கட் தீவு இங்குதான் உள்ளது சுனாமி உருக்குலைத்துப்போட்டதே அதே புக்கட் தீவுதான் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று பார்க்கவேண்டிய இடம் இது மீன்பிடித் தொழிலும் சுற்றுலாவும் மகா புத்தர் சிலையும்தான் புக்கட் தீவின் அடையாளங்கள் இங்கே உள்ள தீவுகளுக்குள் படகுப் பயணம் செய்வது திகில் நிறைந்தது அழகிய அமைதியான கடற்கரைகள் தீவு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன மனதைக் கொள்ளைகொள்ளும் சூரிய உதயம் தங்கும் விடுதிகள் என புக்கட் தீவே  உங்களுக்கு பிரமிப்பைத் தரும் புக்கட் தீவில் பதாங் நகரில் சர்வதேச விமானநிலையமும் உள்ளது பாங்காக்கில் இருந்து விமானத்தில் 115 நிமிட நேரத்தில் பதாங் நகருக்குச் சென்றுவிடலாம்  பேருந்தில் பயணித்தால் 13 மணி நேரமாகும் வாடகைக் கார்களும் ஏராளமாகக் கிடைக்கின்றன தாய்லாந்து நாட்டின் பிற பகுதிகளுடன் புக்கட் தீவுக்குப் பாலம் இணைக்கப்பட்டுள்ளது சுமார் 576 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட இந்தத் தீவில் இஸ்லாமியர்களும் சீனர்களுமே அதிகம் வசிக்கின்றனர் ரப்பர் உற்பத்தியும் சுற்றுலாவும்தான் தீவின் ஆணிவேர் செழித்த பொருளாதாரம்கொண்ட இந்தத் தீவில் உள்ள கடலில் அலைகளே இருக்காது புக்கட் தீவைச் சுற்றிச் சுற்றி குட்டித் தீவுகளும் உள்ளன  நீர் விளையாட்டுகளுக்கு புக்கட் தீவு  வெகு பிரசித்தம் அழகிய நீர்வீழ்ச்சிகள் காடுகள் நிறைந்த இந்தத் தீவில்தான் சீனர்களின் புனிதத்தலமான சாம்டோங் கோயில் உள்ளது அக்டோபர் மாதம்தோறும் இந்தக் கோயிலில் கொண்டாடப்படும் `சைவத் திருவிழா39 உலகப் பிரபலம் இந்தக் காலகட்டத்தில் சீனர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடுகிறார்கள் அலகு குத்துதல் தீ மிதித்தல் என இந்தக் கோயிலில் சீனர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும் விசித்திரம் புக்கட் தீவின் கடல் வகை உணவுகளும் நாக்கில் எச்சில் ஊறவைக்கின்றன சாதாரண மீன்களில் இருந்து இறால் மீன் வரை நண்டு முதல் ஆக்டோபஸ் குட்டி வரை இங்கே கிடைக்கும் ஹோட்டல்களில் மீன்களை உயிருடனே வைத்திருக்கிறார்கள் எந்த மீன் வேண்டுமோ அதை நாமே தேர்வுசெய்து கொடுத்தால் சுடச்சுட சமைத்துப் பரிமாறுகிறார்கள் ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் பேரம் பேசுவதில்லை நம்ம ஊர் சுற்றுலாத் தலங்களில் தாறுமாறாக விலை வைத்து விற்பதுபோலவே புக்கட் தீவிலும் விலை சொல்கிறார்கள் பேரம் பேசினால் படிகிறார்கள் தாய்லாந்து பாணியிலான சமையல் நம்மை நிறையவே ருசித்துச் சாப்பிடச்செய்கிறதுஆயுர்வேத மசாஜையும் மறந்துவிடாதீர்கள் தாய்லாந்து மற்றும் புக்கட் தீவைப் பொறுத்தவரை சுற்றுலா நெட்வொர்க் மிகப்பெரியது 9 மணிக்குக் கிளம்பவேண்டுமென்றால் சரியாக 9 மணிக்கு நமக்கான கார் வந்து நிற்கும் பெரும்பாலானோருக்கு தாய்மொழிதான் தெரியும் ஆங்கிலம் பேசத் தெரிந்த கைடுகள் கிடைத்தால் மிகவும் நல்லது தாய்லாந்து மற்றும் புக்கட் தீவுக்குச் சுற்றுலா செல்கிறீர்களா நீங்கள் முன்பே செய்யவேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன KLOOK App-ஐ மறக்காமல் டவுண்லோடு செய்துகொள்ளுங்கள் எங்கே செல்வது எங்கே தங்குவது போன்ற பல விஷயங்களை அதன்மூலம் அறிந்துகொள்ளலாம் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பாங்காக் ஸ்வர்ணபூமி விமானநிலையத்திலேயே `ஸ்பாட் விசா39 பெறலாம் இதற்கு இரு வழிகள் உள்ளன வரிசையில் நின்றும் எடுக்கலாம் சற்று கூடுதல் பணம் செலுத்தி எக்ஸ்பிரஸ் கவுன்டர்களிலும் ஸ்பாட் விசா பெறலாம் அப்படிப் பெற்றவர்கள் 15 நாள்களுக்குமேல் தாய்லாந்தில் தங்கக் கூடாதுபாங்காக்குக்குப் பயணிக்க ஏர் ஏஷியா விமானம் ஏற்றது இதில்தான் பயணக் கட்டணம் மலிவாக உள்ளது ஆனால் 7 கிலோ லக்கேஜ்தான் இந்த விமானத்தில் அனுமதி என்பதையும் நினைவில்கொள்ளுங்கள் முன்பதிவு செய்திருந்தால் ஆஃபர் கிடைக்கவும் வாய்ப்புள்ளது பாங்காக் நகரில் பயணத்துக்கு ஸ்கை ரயிலைப் பயன்படுத்திக்கொள்ளலாம் ஸ்கை ரயில்நிலையங்கள் அருகே ஏராளமான ஹோட்டல்களும் உள்ளன பெரும்பாலான ஹோட்டல்களில் செக் இன் நேரம் 2 pm to 12 am தாய்லாந்தில் இறங்கியவுடன் 8 நாள்கள் பயன்படுத்தும் வகையில் சிம்கார்டுகள் கிடைக்கின்றன இதற்கு 300 ரூபாய் செலவாகும்ஒரு முக்கியத் தகவல் பயணத்துக்கு முன் நம் இந்தியப் பணத்தை டாலருக்கு மாற்றிக்கொள்வது நல்லது தாய்லாந்து சென்று இறங்கிய பிறகு தாய்லாந்து பணமான பக்துக்கு மாற்றிக்கொள்ளுங்கள் இதற்கான ஏஜன்சிகள் அங்கே ஏராளம் உள்ளன புக்கட் தீவையும் மகா புத்தரையும் ஒருமுறை தரிசித்துவிட்டுத்தான் வாருங்களேன்புக்கட் தீவில் நீங்கள் மிஸ்செய்யக் கூடாதவைகதா நை பீச்நை ஹார்ன் பீச்காரன் வியூ பாயின்ட் வாட் சலாங் புத்தர் ஆலயம்புக்கட் நகர வார இறுதிச் சந்தைபுக்கட் புலிகள் சரணாலயம் (இங்கே நீங்கள் புலியுடன் புகைப்படம் எடுக்கலாம்)பங்ளா சாலைசுரின் பீச்புக்கட் யானைகள் சரணாலயம்சோய் தெருநாய்கள் சரணாலயம்குரங்கு மலைபாங் கா கடல் பகுதி Simon Cabaret ShowPhuket FantaSea Showபுக்கட் மியூசியம்காவோ ரங் வியூபாயின்ட் ஜூய் ஜூய் கோயில் புக்கட் பழைய நகரம் படோங் பீச்கிப்பான் குரங்குகள் சரணாலயம்

Leave A Reply

Your email address will not be published.