`புது கட்டுப்பாடுகள் ; பள்ளிகள் மூடல்’ – நச்சுப்புகையால் அவதிப்படும் பாங்காக்!

0 54

தாய்லாந்து தலைநகரம் பாங்காக் நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்றில் நச்சுப்புகையின் பாதிப்பு அதிகமாக உள்ளது இதைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது காற்று மாசின் பாதிப்பைத் தடுக்க முகமூடி அணிய வேண்டும் எனவும் வருகின்ற சீனப் புத்தாண்டுக்கு ஊதுபத்தி காகிதங்கள் உட்பட எதையும் எரிக்கக் கூடாது எனவும் மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது இது ஒருபுறமிருக்க திடீரென அனைத்துப் பள்ளிகளும் சில நாள்கள் வரை மூடப்பட்டுள்ளன photo credit @RichardBarrowஇதுகுறித்து பாங்காக் ஆளுநர் Aswin Kwanmuang கூறும்பொழுது “பாங்காக் உட்பட 3 4 நகரங்கள் இதனால் பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளன பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதன்மூலம் பாதிப்புகளையும் போக்குவரத்து சிக்கல்களையும் குறைக்கலாம் மேலும் பூங்காக்களில் உடற்பயிற்சி செய்பவர்களையும் எச்சரித்துள்ளோம்3939 என்றார் அதிகமான போக்குவரத்து செயல்பாடுகள் கட்டுமானப் பணிகள் பொருள்களை எரித்தல் மற்றும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை போன்றவை காற்று மாசுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது photo credit @RichardBarrowகாற்றின் மதிப்பீடு அளவீட்டின்படி காற்றின் மாசுபாடு இந்த மாத மத்தியில் இருந்த 156 என்ற அளவிலிருந்து 171ஆக உயர்ந்துள்ளது இது சீனாவின் பெருநகரங்களின் காற்று மாசைவிட அதிகம் இந்நிலை தொடர்ந்தால் விரைவில் பாங்காக் மோசமான நிலையை அடையும் என்கிறார்கள் பசுமை ஆர்வலர்கள் ஆஸ்திரேலியாவில் நீர் வற்றுமளவிற்குக் கடும் வெப்பம் அதற்கு நேர்மாறாக அமெரிக்காவில் நீர் உறையுமளவிற்குக் குளிர் பாங்காக் மற்றும் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு ஆகியவை உலக வெப்பமயமாதலின் விளைவை அருகில் பார்க்கக்கூடியதாக உள்ளன 

Leave A Reply

Your email address will not be published.