நாலாபக்கமும் சீறிவந்த தண்ணீர்… நடுவில் சிக்கிய வாகனங்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

0 80

பிரேசில் நாட்டில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்நிலையில் அணை உடைந்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளதுபிரேசிலின் புருமாடின்கோ நகரத்தில் பயன்பாட்டில் இல்லாத அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது அப்போது அணையின் அருகே இருந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர் அணையின் அருகே ஓர் உணவகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரும் சேறும் சிறிது நேரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமித்தது இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகரித்தது ஏராளமானோர் காணாமல் போயினர் அணைகளைச் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது சேறு சகதி அதிகமாக இருப்பதால் அப்பகுதிகளில் மீட்புப்பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது தீயணைப்புத் துறையினர் போலீஸார் ஆகியோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன சுரங்கத் தொழிலாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர் பிரேசில் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 248 பேர் காணாமல் போயுள்ளதாகவ்ய்ம் தெரிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்தவர்களில் 70 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் காணாமல் போனவர்கள் சகதிகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்புகள் குறைவு என்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறதுஇந்நிலையில் இந்த அணை உடைந்த விபத்து தொடர்பாக வீடியோ காட்சி வெளியாகியுள்ளது சுரங்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளனர் அணை உடைந்து வெளியேறும் தண்ணீர் சேறும் சக்தியுடனும் சுரங்கத்துக்குள் வரும் காட்சி பதிவாகியுள்ளது அப்போது அங்கு வாகனங்கள் பொதுமக்கள் உலாவிக்கொண்டிருக்கின்றனர் அவர்களின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை Footage has emerged of the moment Brazil39s Brumadinho dam burstDozens were killed after the dam failure unleashed a surge of mud that buried buildingsFor more stories from around the world visit httpstcoN2NbUXaJWw pictwittercomQeJxkxhY1L— Sky News (@SkyNews) February 1 2019

Leave A Reply

Your email address will not be published.